“டெபாசிட் கூட கிடைக்காது... சீமான் ஒரு மனநோயாளி”- ராஜீவ்காந்தி

 
s

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மனநோயாளி என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி விமர்சித்துள்ளார்.

s


கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, “கடந்த ஒரு மாதமாக சீமான் பேச்சு, தமிழீழ நிலைபாடு, வெளியிட்ட தரவுகள் சீமானின் முகம் போலியானது என அம்பலமாகி உள்ளது. சீமான் என்ற போலி பிம்பம் வன்மத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஈழம் என்ற அரசியல் 1970-க்கு பிறகு தமிழகத்தில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குனர்கள் பலர் ஈழத்திற்கு சென்று வந்தனர். ஆனால், சீமான் சென்று வந்த பிறகு தமிழீழ மண் அழிக்கப்பட்டது. தமிழீழ விவரங்களை பன்னாட்டுக்கு அளித்து, இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு சீமான் உளவு பார்த்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். இதனால், தமிழீழம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டது. பிரபாகரனுடன் சீமான் இருந்த புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டு என தெரியவந்துள்ளது. இப்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷின் நேர்காணல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர், சீமான்- பிரபாகரன் சந்திப்பு 10 நிமிடம் கூட நடக்கவில்லை என கூறியுள்ளார். எங்களை போன்ற இளைஞர்களை சீமான் ஏமாற்றி உள்ளார். எல்லாளன் ஷூட்டிங்கிற்காக 6 புகைப்படம் எடுத்துள்ளார். அவர் பிரகாரனை சந்தித்த படங்கள் வெளியில் வரவில்லை. 

பொய், பித்தலாட்டம், தற்குறியின் முழு வடிவமாக சீமான் இருக்கிறார். 2008-ல் சிறையில் இருந்து வெளியில் வந்த சீமான் ஏன் போராட்டத்தில் ஈடுபடவில்லை?. டிசம்பர், ஜனவரியில் போராட்டம் உச்சத்தில் இருந்த போது சீமான் மாயாண்டி குடும்பத்தார் படத்தில்  நடிக்க சென்றுவிட்டார். தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு சிதைத்துவிட்டார். தமிழீழம் தொடர்பாக, ஜநா போன்ற பன்னாட்டு தளத்தில் சட்டரீதியாக இயங்கும் அமைப்புகளுடன் முரண்பாடு உள்ளவர். தமிழீழத்தை கொச்சைப்படுத்தியவர் சீமான். அவர், தனது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் "சமஸ்கிருதம் திணிப்பை விட, இந்தி திணிப்பை விட, கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு" என வைத்துள்ளார். ஆமை கறி சாப்பிட்டதாக பல கதைகளை சொல்லி உள்ளார். தமிழீழம் குறித்த புரிதல் அவருக்கு இல்லை. தமிழீழத்தை நீர்த்து போக செய்தவர் சீமான். அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட ஆபத்தானவர். 

அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம் சீமான். ஈழத்தில் நிதி வந்தது என கூறுவது பொய். அங்குள்ள மக்களை சுரண்டி தின்று இருக்கிறார். பிரபாகரனை சீமான் 2 முதல் 8 நிமிடங்கள் தான் சந்தித்து இருப்பார். இவர் சந்தித்த வீடியோ சில வாரங்களில் வெளியிடப்படும். இவரது ஒழுக்ககேடான வாழ்க்கை, ஊதாரித்தனத்தால் தமிழீழ விடுதலை புலிகள் இவரை ஒதுக்கினர். ஈரோடு இடைத்தேர்தலில் சீமானுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. போர் விமானத்தில் சென்றதாக பொய் கூறியுள்ளார். தற்போது பெரியாரை குறித்து பேசிய அவர், அடுத்து அம்பேத்கர் குறித்து பேசுவார். சீமானை இயக்க இங்கு ஏதோ ஒரு அமைப்பு தயராகி வருகிறது. சீமான் ஒரு மனநோயாளி. இயக்குனர் ராஜ்குமார் மீது வழக்கு தொடராமல் கடந்து போகிறார். பிரபாகரன் அண்ணன் மகன் கருத்துக்கு சீமானிடம் பதில் இல்லை. கெட்ட வார்த்தை பேசுவதை இயல்பாகவும், அதனை செந்தமிழ் எனவும் கூறி வருகிறார். 

சீமானுக்கு அறம் என்பது கிடையாது. தமிழர் அடையாளங்களை அழிக்க வந்த பாஜவின் கைக்கூலி. பிரபாகரன் என்ற போராளியை கொச்சைப்படுத்தி வருகிறார். சீமான் பாஜவால் இயக்கப்படுகிறார் என உண்மையாக நம்புகிறேன். 2009-ல் சீமான் என்ன செய்தார் என விஜயலட்சுமி சொல்லி வருகிறார். விடுதலை போராட்டத்தை தனது லாபத்திற்காக பயன்படுத்தி கொண்டார். துப்பாக்கி பயிற்சி, புகைப்படங்கள் என அனைத்தும் பொய் என அம்பலமாகி உள்ளது. வருமானம் தான் அவருக்கு முக்கியம். சுகபோக வாழ்க்கைக்காக இளைஞர்களின் உழைப்பை சுரண்டுகிறார். சீமானுக்கு அரசியல் அங்கீகாரம் விஜயால் தான் கிடைத்தது. சீமானுடன் அரவணைப்பு என்பது ஆபத்தானது என எடப்பாடி பழனிசாமி புரிந்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் சீமான் பேச்சை நம்ப கூடாது. உண்மையான அரசியலுக்கு வர வேண்டும். இனி பலர் சீமான் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள்” என்றார்.