“திமுக எனும் ஆலமரத்தை யாராலும் அசைக்க முடியாது!”- ரஜினிகாந்த்

 
ரஜினி

கலைஞர் நூற்றாண்டு விழா என்னை பிரம்மிக்க வைத்த விழா என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Image

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “உலகத்திலேயே ஒரு அரசியல் தலைவருக்கு இந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான விழாவை யாரும் கொண்டாட மாட்டங்க, கொண்டாட போவதும் இல்லை. அரசியல் பேசினால் ஜாக்கிரதையாக பேச வேண்டும். பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது. கலைஞர் கருணாநிதிக்கு வந்த சோதனைகள் வேறு யாருக்கேனும் வந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள். சமூகம் மற்றும் மக்களின் நலனுக்காக கருணாநிதி பாடுபட்டவர். கலைஞரின் அந்தக் கண்ணீரையும், ஸ்பரிசத்தையும் மறக்கவே முடியாது.

திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள். அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள். திமுக எனும் ஆலமரத்தை யாராலும் அசைக்க முடியாது. கலைஞரை பற்றி அரை மணி நேரம் ராஜ்நாத் சிங் பேசுகிறார் என்றால், அதை ராஜ்நாத் சிங் மட்டும் பேசி இருக்க மாட்டார், மேலே இருந்து உத்தரவு வந்திருக்கும்.  சீனியர்களை நல்லா சமாளிக்கிறீங்க... Hats off to you ஸ்டாலின் சார். முதல்வர் ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி. ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை.” என வாழ்த்தினார்.