பாலியல் வழக்கில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய ராஜேஷ் தாஸ்

 
y

பாலியல் வழக்கில் தமிழகத்தில் தொடரப் பட்டிருக்கும் வழக்கை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

 பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.    இந்த விசாரணைக்கு தடை கோரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

sk

 அந்த மேல்முறையீட்டு மனுவில்,   தன் மீதான பாலியல் வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்ற வேண்டும்  என்றும்,  சம்பந்தப்பட்ட அதிகார வரம்பில் இல்லாத விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகின்றது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ராஜேஷ் தாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.