ஃபார்முலா 4 பந்தயம் நடக்கும் சாலையில் மழைநீர்
சென்னையில் மழை பெய்துள்ள நிலையில் ஃபார்முலா 4 பந்தயம் நடக்கும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்" 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெற்றுவருகிறது. ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க வருபவர்களுக்கு சென்னைப் பல்கலை வளாகம், பத்திரிக்கையாளர் மன்ற சாலை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மைதானம்,கலைவாணர் அரங்கம், சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி மைதானம், கேந்திரிய வித்யாலயா பள்ளி மைதானம், ராஜரத்தினம் மைதானம் உள்ளிட்ட 7 இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழை பெய்துள்ள நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கும் சாலையில் உள்ள மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.