அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

 
Rain

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் இன்று ( ஆக.29 ) உருவான் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு தினங்களில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rain

இதன் காரணமாக, இன்று (ஆகஸ்ட் 29) மற்றும்  நாளை (ஆக.30), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. தொடர்ந்து 7  நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்  அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தற்போது  அடுத்த 3 மணி நேரத்திற்குள் 10  மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை தெரிவித்திருக்கிறது.  அதன்படி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.