சென்னையில் மழை நீர் பெருக்கு : போக்குவரத்து மாற்றங்கள்!!

 
rain

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரின் போக்குவரத்து தற்போதைய நிலவரம் குறித்து சென்னை காவல் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் :-

பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள்,  தியாகராயநகர், பசுல்லா  உள்ள சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.  இதன் காரணமாக மேற்கொண்டு ஜிஎன் செட்டி சாலை வாணி மஹால் சந்திப்பிலிருந்து பசுல்லா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜிஎன் செட்டி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.

Chennai rain

மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள்.  இதன்  காரணமாக கேகே நகர் ஜிஎச்க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் பணியை எளிதாக்கும் வகையில்,  உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்திசையில் அனுமதிக்கப்படுகிறது.  இதேபோல உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

சாந்தி காலனி 4வது அவின்யூவில்  இந்தியாவில் மெட்ரோ கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணிகளையும், மேற்கொண்டு வருவதால், திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் மூன்றாவது அவின்யூ இரண்டாவது அவின்யூ  நோக்கி திருப்பி விடப்படுகிறது.

rain

மதுரவாயல் பைபாஸ் சாலை சர்வீஸ் சாலையில் இருந்து,  அத்திப்பட்டு போகும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் அதிகமாக தண்ணீர் செல்வதால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நகர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் அதிகமாக தண்ணீர் செல்வதால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இருப்பினும்  மழையின் காரணமாக தண்ணீர் தேங்குவது மற்றும் எந்தவித போக்குவரத்து இடையூறு தற்போதைக்கு இல்லை.