தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 30ம் தேதி கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காரைக்கால் மாமல்லபுரம் இடையே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர் விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.