ரயில்வே பிளாட்ஃபாரக் கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக குறைப்பு..

 
Railway Station

கொரோனா பரவல் காரணமாக, சென்னை சென்ட்ரல், தாம்பரம், அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவது கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.  

rupees

பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 6 ரயில் நிலையங்களில் மீண்டும் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்பட்து. ஆனால் பிளாட்ஃபாரம் கட்டணம் ரூ.10லிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் நோக்கிலான புதிய கட்டணம் உயர்த்தி வசூல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது நிலைமை சீரடைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ள காரணத்தினால், யில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.