விஜய் கட்சி ஆரம்பித்ததே சீமானின் மனநிலை பாதிப்பிற்கு காரணம்- புகழேந்தி

 
கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்ஸூக்கும் சம்பந்தம் உண்டு: புகழேந்தி

ஈரோடு பெரியார் அண்ணா நினைவகத்தில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

‘டோக்கன் செல்வன்’ தினகரனுக்கு  ‘அந்த’ ஐடியாவை கொடுத்ததே செந்தில் பாலாஜி தான்…புகழேந்தி பரபரப்பு தகவல்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “பெரியார் மண்ணில் வெடிகுண்டு வீசுவேன், புல் பூண்டு கூட முளைக்காது என்று சீமான் பேசி இருக்கிறார். பிரபாகரன் வெடிகுண்டை கொடுத்ததாக சொல்கிறார். தமிழ்நாடு தாங்காது பற்றி எரியும் என கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார். சீமானுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவருக்கு விஜய் தான் பிரச்சனை. வேறு யாரும் பிரச்சனை இல்லை. விஜய் கட்சி ஆரம்பித்தது தான் சீமானின் மனநிலை பாதிப்புக்கு காரணம்.

விடுதலைப் புலிகளில் மிக முக்கியமானவர் கிட்டு.  நாங்கள் திராவிடர்கள் என அவர் பேசியிருக்கிறார். விடுதலைப் புலிகள் திராவிடர்கள் என கிட்டு பேசி இருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லை இயற்கையை தான் நம்புகிறோம் என அவர் சொல்லியிருக்கிறார். சீமான் அமைதியாக நல்லவராக தான் இருந்தார். விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு பிறகுதான் இவர் இவ்வாறு மாறிவிட்டார். இவ்வளவு டென்ஷன் விஜயை பார்த்து சீமானுக்கு பயமும் நடுக்கமும் வந்துவிட்டது. அதை மற்றவர்களிடம் காண்பிக்கிறார். சீமானை ஏதாவது ஒரு கட்சி ஆதரிப்பதாக சொல்லிவிட்டால் நான் அரசியலை விட்டு வெளியேறி விடுகிறேன். எடப்பாடி பழனிச்சாமி சீமானுக்கு எதிராக பேச மாட்டார், ஏனெனில் அவருக்கு பெரியார் பற்றி தெரியாது. ஓபிஎஸ் பேசுவதற்கு பயப்படுகிறார்.

நான் சொன்னது நடந்துச்சா? இந்த அவமானம் தேவையா? – புகழேந்தி

சீமானுக்கு எந்த திராவிட இயக்கத்திலும் இடம் இல்லை. அதிமுகவில் எப்போதும் அவரை சேர்க்க மாட்டார்கள், அரசியல் அனாதையாக சீமான் ரோட்டில் திரிவார். சீமானுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது. பெரியாரைத் தொட்டு அவர் கெட்டுப் போய்விட்டார். தந்தை பெரியாரைப் பற்றி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவும் தெரியாது. சீமானை பற்றி அவர் விமர்சிக்க மாட்டார், எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் பேசவில்லை, சசிகலா பேசவில்லை, சீமான் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என நான் மட்டுமே வழக்கு போட்டு இருக்கிறேன். டெல்லியில் இருந்து சொன்னால் தான் அவர்கள் பேசுவார்கள். பெரியார் பிறந்த மண்ணில் கலவரத்தை ஏற்படுத்த சீமான் எதிர்பார்க்கிறார். வன்முறையை உருவாக்கும் வகையில் பேசிவரும்  சீமானை கைது செய்ய வேண்டும். அதிமுக-பாஜக கூட்டணி திரை மறைவில் இருந்து கொண்டிருக்கிறது” என்றார்.