“எடப்பாடி பழனிசாமி என்னை அப்படியெல்லாம் சொல்ல முடியாது”- தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு
அண்ணா திமுக உறுப்பினர் இல்லை என்று மற்றவர்களை சொல்லுகின்ற உரிமை, தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி பதில் மனு அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் வா புகழேந்தி உள்ளிட்ட அவரை எதிர்த்து புகார் அளித்தவர்கள் அண்ணா திமுக உறுப்பினர்கள் இல்லை என்று தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கடிதம் அளித்துள்ளார் அதனை தேர்தல் ஆணையத்திற்கு நகலாகவும் சமர்ப்பித்துள்ளார். அதற்கு பதில் தரும் வகையில் வா புகழேந்தி அவர்கள் இன்றைய தினம் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு ஒன்றை சமர்ப்பித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மற்றவர்களை உறுப்பினர் இல்லை என்று சொல்வதற்கும் தலையிடுவதற்கும் எந்த உரிமையும். வழக்குரிமையும் இல்லை என குறிப்பிட்டு விவரமான மனுவினை சமர்ப்பித்துள்ளார்/
டெல்லி உயர்நீதிமன்றத்தில் (W.P.(C).No.3680 of 2024) புகழேந்தி தொடுத்திருந்த வழக்கில் உறுப்பினர் இல்லை என்கிற வாதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுத்து வைத்தும் வேறு பல விஷயங்களை சொல்லியும் அதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை தவிர்த்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று இவர்கள் சொல்லிய பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டு பின்னர்தான் புது டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் தொட்டு பல பொறுப்புகளை வகித்து வந்ததாகவும், அதில் குறிப்பாக கர்நாடக மாநில அண்ணா திமுக செயலாளர் கழக இணை செயலாளர் செயற்குழு உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர் மாநில பேரவை செயலாளர் மற்றும் இணை செயலாளர் மேலும் மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதாகவும் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் இறப்பதற்கு முன்னர் தொடர்ந்து அவர்கள் ஆணைக்கிணங்க பல பொறுப்புகளை வைத்துதோடு கழகத் தேர்தல் மூலம் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பல தமிழக, புதுச்சேரி தேர்தல்களில் பொறுப்பாளராகவும் பதவி வைத்துள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பின்னர் ஆர்கே நகர் தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு பின்னர் மறைந்த முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்கள் தலைமையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செம்மலை ஆகியோருக்கு கட்சி சின்னம் பெயர் ஆகியவை வழங்கப்பட்டது. அந்த வழக்கில் (2/2017) புகழேந்தி ஆகிய நானும் எடப்பாடி பழனிசாமியும் இடை மனுதாரராக (Intervenor) இருந்தோம் என்பதனை குறிப்பிட்டுள்ளார். அதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது வழக்கின் பதிவேட்டிலும் உள்ளது. பின்னர் கழக தேர்தல் நடத்தி அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து செயல்பட ஆரம்பித்தனர்.
பிரிந்து செயல்பட்ட பொழுது தேர்தல் ஆணைய பதிவேட்டில் ஒருங்கிணைப்பாளராக உள்ள திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் யார் யாரெல்லாம் பழனிசாமி கழக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்களோ மற்றும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கிறார்களோ அவர்களை மிக எளிதாக கட்சியில் உறுப்பினர் இல்லை என சொல்லி தட்டிக் கழிக்க பார்க்கிறார். இதை சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக அடிப்படையில் எந்த உரிமையும் இல்லை. தவறான குற்றச்சாட்டை மூத்த கழக உறுப்பினராக பல பொறுப்புகளை மாண்புமிகு அம்மா அவர்கள் உத்தரவின் பேரில் வகித்து செம்மையாக பணியாற்றிய என்னை பார்த்து சொல்வது மிக வேடிக்கையாக இருக்கிறது , மிக முற்றிலும் தவறான ஒன்று என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.