ரூ.8,000 கோடியை அபேஸ் பண்ண எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை கைது செய்க- புகழேந்தி

 
Pugalendhi

சென்னை மாநகரில் ஒரு சொட்டு  தண்ணீர் தேங்காமல் சீர் அமைத்ததாக  கூறி மத்திய, மாநில அரசின் ரூ. 8000 கோடிக்கு மேல் முறைகேடு  செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிமுக  முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

The big news: Edappadi Palanisamy sworn in as Tamil Nadu CM, and nine other  top stories

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, “எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் பேசிய பேச்சு,  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், சென்னை மாநகரை ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு தண்ணீர் நிற்காமல் சீரமைத்து உள்ளதாக பேசியுள்ளார்.  இது முற்றிலும் பொய்யான தகவல்.  ஆனால் தற்போது சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கிறது.  

கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை, சென்னை வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது சென்னை மாநகரை சீரமைத்து விட்டதாகவும்,  இனி எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது என்றும் பொய்யாக பேசினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மத்திய, மாநில அரசு நிதி என 8000 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்துள்ளனர்.  

இதில் மத்திய அரசு நிதி 6 ஆயிரத்து 744 கோடி என 8000 கோடி ரூபாய்க்கு மேல் சென்னை மாநகரத்தில் மட்டும் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் பேசியுள்ளார், அதாவது சென்னை நகரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைத்து விட்டதாகவும்,  இனி தண்ணீரே  நிற்காது என எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சின்  வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது . இதுவே பெரிய ஆதாரம்.  எனவே இதை வைத்தே எடப்பாடி பழனிச்சாமியை  தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து பொய் கூறி அவர் உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக இந்த வழக்கை எடுத்து ஒதுக்கிய பணம் என்ன ஆனது?  என்னென்ன பணிகள் நடைபெற்றது என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி  மற்றும் தவறு செய்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரிக்க வேண்டும். மக்கள் வரிப்பணமான  ஏழைகளின் வயிற்றில் அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்து  ஏமாற்றிய  எடப்பாடி பழனிசாமியால் தொண்டர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர் தலைமையில் அதிமுக  கட்சி அழிந்து வருகிறது. இதற்கு ஓ . பன்னீர்செல்வமும்  முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்,  இனி உள்ளாட்சித் தேர்தலில் கூட அதிமுக ஜெயிக்க வாய்ப்பே இல்லை. கொடநாடு கொலை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது சந்தேகம் உள்ளது. தற்போது கைதாகியுள்ள ஓட்டுனர்  கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் அப்ரூவராக மாறி,  அவர்கள்  அளிக்கும் ரகசிய வாக்கு மூலத்தின்  மூலம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கொள்ளை கும்பல்  சிக்குவார்கள்”  என உறுதிபட தெரிவித்தார்.