'திருமாவளவன் ஒன்றும் திமுக கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்கவில்லை' - எம்பி கார்த்தி சிதம்பரம்

 
கார்த்தி சிதம்பரம்

கடவுள் மறுப்பு குறித்து திருமாவளவன் பேசியதாக எனக்கு தெரியவில்லை, அப்படி பேசி இருந்தால் தற்போது அவர் மனதை மாற்றி இருக்கலாம், அதனால் தான் அவர் பழனி கோயிலுக்கு சென்றிருக்கலாம். இதற்கு விமர்சனம் செய்வதில் ஏதுமில்லை என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

karthik chidambaram
 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியில் இருந்ததோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  இதிலிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் முடிவு என்பது மாறுபடுகிறது, ஒரு மாநிலத்தில் ஏற்பட்ட முடிவு மற்ற மாநிலத்தை எதிரொலிக்கும் என்பது கூற முடியாது. பிரியங்கா காந்தி வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்வரவு. பாராளுமன்றத்தில் அவர் வருவது எங்களுக்கு வலு சேர்க்கும். இண்டன் பார்க் விவகாரம் அல்லது அதானி விவகாரம் ஒரு தேர்தல் முடிவை மாற்றும் என்று கூற முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் எழுப்பவோம், நீதிமன்றத்திற்கு செல்வோம். அதானி விவகாரத்தை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற கம்பெனி மூலமாக தான் பல மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அதானி குடும்பம் தான் மின்சாரம் சப்ளை செய்கிறது, அந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் பல மாநில அதிகாரிகள், அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுள்ளனர்.  இதை விசாரிக்க வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு. ஒன்றிய அரசு உடனடியாக கூட்டு பாராளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பல்வேறு மாநிலங்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் சிபிஐ விசாரணைக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். 

விஜய் வருகையால் தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. விஜய் கட்சி தொடங்கியுள்ளார் மாநாடு நடத்தியுள்ளார், அந்த மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது. அதிக அளவு கூட்டம் வந்தது உண்மை, எழுச்சி இருந்தது உண்மை. இருப்பினும் அது ஒரு உருவமாக வடிவமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் அரசியலுக்கு வந்திருந்தாலும் களத்திற்கு இன்னும் வரவில்லை பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை, அவர் அறிவித்துள்ள கொள்கையிலேயே பல முரண்பாடுகள் உள்ளது. நடப்பு அரசியல் நிகழ்வு குறித்து இதுவரை எந்த கருத்தும் விஜய் வெளியிடவில்லை. 

Karti chidambaram press meet

திருமாவளவன் முதலமைச்சராக வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது அவருடைய கருத்து, அவருக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் . தற்போது கட்சி தொடங்கி தேர்தலையே சந்திக்காதவர்கள் எல்லாம் முதல்வராக ஆக வேண்டும் என்று கூறும் போது நீண்ட கால அரசியலில் போராட்ட களங்களில் இருக்கும் திருமாவுக்கு ஏன் வரக்கூடாது? எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக இருக்கும். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று முதலில் நான் தான் குரல் கொடுத்தேன். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பு வந்தது. ஒரு தலைவர் மட்டும் அதை முதலில் எதிர்த்தார், அதன் பிறகு என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தார். கடவுள் மறுப்பு குறித்து திருமாவளவன் பேசியதாக எனக்கு தெரியவில்லை அப்படி பேசி இருந்தால் தற்போது அவர் மனதை மாற்றி இருக்கலாம், அதனால்தான் அவர் பழனி கோயிலுக்கு சென்றிருக்கலாம். இதற்கு விமர்சனம் செய்வதில் ஏதுமில்லை. திருமாவளவன் ஒன்றும் திமுக கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்கவில்லை” என்றார்.