புதுச்சேரியில் ரேஷன் கடை, கழிவறை இல்லையா? இதுதவிர இங்கு வேற பிரச்சனையே இல்லையா?- விஜய்க்கு நமச்சிவாயம் பதிலடி

 
ச் ச்

எதிர்காலத்தில் என்.ஆர்.காங்கிரசை கூட்டணியில் கொண்டு வர விஜய் முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், யாரோ எழுதிக் கொடுத்த Script-ஐ விஜய் இங்கு படித்துவிட்டு சென்றுள்ளார். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறந்து மத்திய அரசின் ஒப்புதலோடு அரிசி போட்ட வருகிறது. இது தெரியாமல் அவர் பேசி விட்டு சென்றுள்ளார். அதில் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார். மத்திய அரசை விமர்சித்த விஜய், முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் என்ஆர் காங்கிரசை கூட்டணியில் கொண்டுவர அவர் முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. இருந்தாலும் 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

மாநில அந்தஸ்து விவகாரம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே இருக்கிறது. மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்ன பிரச்சனை உள்ளது என்பதை மத்திய அரசு ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என ஒரு அரசாங்கம் முடிவு எடுக்க முடியாது. பாஜக ஆட்சி காலத்தில் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த விவகாரம் உள்ளது இருக்கிறது என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என நமச்சிவாயம் தெரிவித்தார். யாரைப் பாராட்டுவது என்பது அவரது முடிவு. ஆனால் மத்திய அரசை தொடர்ந்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. தவறான விஷயங்களை மக்கள் மத்தியில் பேசி செல்கிறார். அவர் பேசுவதில் 90% உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் அவருக்கு பேச வாய்ப்பில்லை. 72 நாட்களுக்கு பிறகு இப்போது தான் வெளியே வந்திருக்கிறார். புதுச்சேரியில் கழிவறைகள் இல்லை என அவர் பேசி உள்ளார். கழிவறைகளைத் தவிர வேறு எந்த பிரச்சினையும் புதுச்சேரியில் இல்லையா நமச்சிவாயம் கேள்வி எழுப்பினார்.

அரசியலுக்காக தான் அவர் பேசிச் சென்றுள்ளார். அவர் கூறுவது போல் புதுச்சேரியின் நிலை இல்லை. புதுச்சேரியில் ஏற்கனவே நல்லாட்சி தான் அமைந்துள்ளது 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் அதுதான் அவர் நல்லாட்சி என்று கூறியுள்ளார். ஒரு அமைச்சருக்கு இலாக்கா கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இலாக்கா கொடுக்க வேண்டியது முதலமைச்சர் வேலை. மத்திய அரசு வேலை இல்லை. அந்த அளவுக்கு அவருக்கு என்ன புரிதல் இருக்குது. விஜய்க்கு அரசியல் தெளிவு இல்லை. புதுச்சேரி பற்றி தெரியவில்லை. ஊழல் செய்ததால் அமைச்சரை மாற்றிதாக பேசுவது தவறு.. அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசு விருப்பம். அதனால்தான் அமைச்சர் மாற்றப்பட்டார்.  விஜய் அரசியலுக்கு புதியவர். சினிமா துறை வேறு. அரசியல் துறை வேறு. சினிமாவில் எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட்டை நடித்துவிட்டு போய்விடலாம். ஆனால் அரசியலில் அப்படி இல்லை. எது உண்மையும் அதுதான் பேச வேண்டும். உள்துறை ஒத்துழைப்பு இல்லாமல் விஜயின் பொதுக்கூட்டம் நடைபெறவில்லை. முதலமைச்சரை புகழ்ந்தாலே அது அரசை புகழ்ந்தது தான் அர்த்தம்.. கேப்டன் ஆப் த ஷிப் முதலமைச்சர் தான் என்றார்.