புதுச்சேரியில் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு

 
school

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாளை பந்த் அறிவித்துள்ளன. 

school

புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டு தோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதன் பிறகு மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு முன் தேதியிட்டு கடந்த ஜூன் 16ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு புதுவை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இதையடுத்து அன்று மாலையே, “200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு மானியம் வழங்கப்படும்” என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

Image

இந்நிலையில் புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாளை பந்த் அறிவித்துள்ளன.  இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை புதுவையில் இண்டி கூட்டணியினர் முழு அடைப்பு நடத்தவுள்ள நிலையில், புதுவையின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யக் கோரி காவல்துறையிடம் அதிமுக இன்று மனு அளித்துள்ளது.