இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்

 
‘வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட PSLV-C49 ராக்கெட்’ – பிரதமர் மோடி வாழ்த்து!

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது PSLV C-60 ராக்கெட்.


ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு பிஎஸ்எல்வி-சி 60 ராக்கெட் ஏவுப்படுகிறது. 220 கிலோ எடையிலான 2 சிறிய செயற்கைகோள்களும் பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் உயரத்தில் வெவ்வெறு பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி டிசம்பர் 30-ஆம் தேதி பழவேற்காடு பகுதி மீனவர்கள் உட்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.