கோவையில் மாணவிகளுக்கு இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் அனுப்பிய பேராசியர் கைது!

 
students

கோவையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸப்பில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் 

proffessor

கோவை ஆர்ட்ஸ் கல்லூரியில் பிபிஏ துறைத் தலைவராக உள்ள பேராசிரியர் ரகுநாதன் மாணவிகளிடம் இரட்டை அர்த்த வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும்  ஆபாசமாக பேசியதாக கடந்த 16ஆம் தேதி அப்பிரிவில் பயிலும் மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்திருந்தனர். அது தொடர்பான சாட்டிங்  ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். 

இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் அமைப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், நடவடிக்கை எடுக்காததால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இன்று அரசு கலைக்கல்லூரி நுழைவாயிலின் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ள பேராசிரியர் மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் கோவை ஆர்ட்ஸ் கல்லூரி பேராசிரியர் ரகுநாதனை ரேஸ்கோர்ஸ் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ரகுநாதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.