கூட்ட நெரிசலால் சரிந்த மேடை- கீழே விழுந்த பிரியங்கா மோகன்

 
பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் மேடை சரிந்து விபத்து, சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் தொரூரில்  அண்மினி காஸம் ஷாப்பிங் மால்  தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை பிரியங்க மோகன் பங்கேற்றார். இதற்காக ஷாப்பிங் மால் முன் அமைக்கப்பட்ட மேடையில் நின்று, ரசிகர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்தபோது திடிரென மேடை சரிந்து விழுந்தது. இதில் பிரியங்கா மோகன் லேசான காயத்துடன் தப்பினார்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மால் உரிமையாளர்கள் சரியான முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாதது தான் இதற்கு காரணம் என கூறப்படும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  தொரூர்  என்ற ஊரில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை பிரியங்கா மோகன் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை சரிந்து விழுந்ததில் பிரியங்கா மோகன் உட்பட பத்திரிக்கை மேற்பட்டோர் கீழே விழுந்துள்ளனர். 


இந்நிலையில் இந்த விபத்தில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிப்பதோடு, சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான்  பிரார்த்திக்கிறேன். அவர்கள் எனக்கு அனுப்பிய அன்பு மற்றும் அக்கறையின் அன்பான செய்திகளுக்கு அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.