சபரிமலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.

இந்திய ஜனாதிபதி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் பத்தனம்திட்டாவிற்கு வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பம்பை வந்து இருமுடி கட்டி பதினெட்டாம்படி வழியாக சன்னிதானம் சென்று சுவாமி தரிசனம் செய்து அங்கு ஜனாதிபதி ஓய்வு எடுப்பதாக இருந்தது. மழை முன்னெச்சரிக்கை இருந்த காரணத்தினால் சன்னிதானத்தில் ஓய்வெடுக்காமல் அங்கிருந்து நேராக பம்பைக்கு வந்தார்.
இதைத்தொடர்ந்து பம்பையில் இருந்து இரண்டு மணிக்கு ஜனாதிபதியின் வாகனங்கள் புறப்பட தயாராக இருந்த நேரத்தில் பம்பை பஸ் நிலையம் அருகே பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதை தொடர்ந்து மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். அதன் பின்னரே ஜனாதிபதி பம்பையில் இருந்து பத்தனம்திட்டாவுக்கு புறப்பட்டார். பின்னர் இருமுடி சுமந்து பதினெட்டு படியேறி சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.


