‘அதிகாரம் நம்மை நோக்கி வரும்.. அதுவரை கூட்டணியில் பயணிப்பதே பாதுகாப்பு’ - திருமாவளவன் எம்.பி.

 
thiruma thiruma

“எதிர்காலமும், அதிகாரமும் நம்மை நோக்கி வரும்; அதுவரை கூட்டணியில் பயணிப்பதே கட்சிக்கு பாதுகாப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக கட்சி அலுவலகத்தில் போராளி திலீபன் 37வது நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்  பேசிய திருமாவளவன், “இலங்கையில் நசுக்கப்பட்ட இயக்கத்தில் இருந்து, ஒருவர் இலங்கையில் அதிபராக தேர்வாகி உள்ளார். தேர்தலில் குறைந்த பட்ச வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி, இன்று 45 சதவீதம் வாக்குகளைப் பெற்று உள்ளது. இதற்கு காரணம் சகிப்பு தன்மைதான். இலங்கையில் மக்களோடு மக்களாக நின்று வெற்றி பெற்றுள்ளார். மக்கள் பக்கம் நின்றால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது அதற்கு உதரணம் இலங்கை. 

தமிழ்நாட்டில் கூட்டணி அரசியல் தாண்டி அரசியல் செய்கின்ற இயக்கம் விசிக. திமுக கூட்டணியில் இருந்து அதிமுக இயக்கத்தில் இணைந்து போராட்ட களத்தில் ஈடுபட்டோம். அப்போது ஆசை வார்த்தை கூறினார்கள்; அவர்களிடம் இருந்தா உங்களுக்கு 1 சீட்டுதான் எங்கள் பக்கம் வந்தால் 2 சீட்டு கிடைக்கும் என்று சொன்னார்கள். திமுகவை வீழ்த்த என்னைப் பிரிக்க நினைத்தார்கள். 

 ‘அதிகாரம் நம்மை நோக்கி வரும்.. அதுவரை கூட்டணியில் பயணிப்பதே பாதுகாப்பு’ - திருமாவளவன் எம்.பி.

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசினார். அப்போது நான் எதிர்த்து பேசி வெளிநடப்பு செய்தேன். ஒரு கோடி பேர் உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அதிமுக. ஈழத்திற்கு ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. ஒரு கோடி பேர் உணர்வுகளை கட்டுபடுத்தி வைத்தார்கள். தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் போது வாக்கு வங்கி அரசியல் செய்தார்கள். இலங்கை பிரச்னைக்காக எப்போதும் தனித்து நின்று அரசியல் செய்து வருகிறோம். 

சிதம்பரம் தொகுதியில் ஒட்டுமொத்தமாக தலித் வாக்குகளை பெற்றால் வெற்றி பெறமுடியாது. நீண்ட காலம் நின்று அரசியல் செய்யவேண்டும். எனக்கு யாரும் ஆலோசனை சொல்ல தேவையில்லை. எதிராலி கத்தி முடித்தபிறகு நாம் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நமக்கு அதிகமாக சகிப்புத்தன்மை வேண்டும்.  தேர்தல் நேரத்தில் கவனமாக பேச வேண்டும் ஒரு வார்த்தையை வைத்து கொண்டு ஒருமாதம் அரசியல் செய்வார்கள். ஆதவ் அர்ஜுனா கட்சி நலனில் பேசி விட்டார். பொதுச் செயலாளர்கள் கட்சி மற்றும் கூட்டணி முக்கியம் என்று பேசினார்கள்.

நம்மை சுற்றி எதிரியை உருவாக்க கூடாது.  எதிரி நமக்கு  எதிரே இருக்க வேண்டும். நம்மை சுற்றி இருக்க கூடாது. Safer Zone  இல்லாமல் விளையாடவே கூடாது.   எதிர்காலமும், அதிகாரமும் நம்மை நோக்கி வரும்; அதுவரை கூட்டணியில் பயணிப்பதே கட்சிக்கு பாதுகாப்பு. கருத்தியல் ரீதியாக வலிமை கொண்ட இயக்கம் விசிக. விசிக புதிய பாரிமான வளர்ச்சியை உருவாக்கி வருகிறோம். எனக்கு கட்சி நலன், கூட்டணி நலன், மக்கள் நலன்தான் முக்கியம்” என தெரிவித்தார்.