அப்பல்லோ மருத்துவமனையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு- நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்
May 24, 2026, 09:13 IST1779594202495
சென்னை பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மின்வெட்டால் ஐசியூ நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையின் பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டு பிரச்சனையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம், மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த நோயாளிகளின் உறவினர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது

