கிண்டி மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு - நோயாளிகள் அவதி

 
ச்

சென்னை கிண்டி மருத்துவமனை மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக 2 மணிநேரத்திற்கு மேலாக மின் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

tn

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


இந்நிலையில் சென்னை கிண்டி மருத்துவமனை மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக 2 மணிநேரத்திற்கு மேலாக மின் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். மெயின் கேபிளில் ஏற்பட்ட தீவிபத்தால்  மருத்துவமனை மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. மேலும் ஜெனரேட்டரின் கனெக்‌ஷனும் பழுது ஏற்பட்டதால் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை, அவர்களுக்கு வேறு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது, விரைவில் மின்சாரம் சீரமைக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு விளக்கம் அளித்துள்ளார்.