‘அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம்‘- அதிமுகவினர் போஸ்டர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்ததற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சிவகங்கையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே காரசார அறிக்கைகளும் பேட்டிகளும் வெளிவரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சிவகங்கையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தவறாக பேசினால் அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என போஸ்டரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘அண்ணாமலையே எச்சரிக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அதிமுகவினர் இன்று மதியம் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பினர்.