“விஜய் இப்போ தான் எல்.கே.ஜி படிச்சிட்டு இருக்காரு... இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு” - பொன்முடி
நடிகர் இன்னும் கத்துக்க வேண்டியது நிறையவே இருக்கு, ஒரு மீட்டிங் போட்டுட்டா போதும் என்ன வேணா பேசலாம்னு பேசிகிட்டு இருக்காரு: எல்கேஜி படிச்சுக்கிட்டு இருக்காரு என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாளையம் கிராமத்தில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை கட்டி முடிக்கப்பட்ட பணிகளின் தரம் குறித்தும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஆன பொன்முடி ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் புதுச்சேரியில் த.வெ.க கூட்டத்தின் போது விஜய், புதுச்சேரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு? அவர் இன்னும் கத்துகிறதுக்கு நிறையவே இருக்கு, ஒரு மீட்டிங் போட்டுட்டா போதும் என்ன வேணா பேசலாம்னு பேசிகிட்டு இருக்காரு, கரூரில் மக்கள் அளித்த பாடத்தால் தான் அவர் கற்றுக்கொண்டு சரியான நேரத்திற்கு சென்று இருக்கிறார். அவரு இப்பதான் ஏதோ கொஞ்சம் லெசன் எல்கேஜி படிச்சுக்கிட்டு இருக்காரு படிச்சிட்டு வரட்டும் என்று கூறினார்.


