பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்!!

 
stalin

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 

stalin

பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படும்.  அந்த வகையில் இந்த முறை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் இருப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  

pongal

இந்நிலையில்  21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு எந்தவித தடையுமின்றி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை தேதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதியன்றும் நியாயவிலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி,வெல்லம், முந்திரி,திராட்சை,ஏலக்காய்,பாசிப் பருப்பு,நெய்,மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் , கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு,  ரவை, கோதுமை மாவு, உப்பு, கரும்பு உள்ளிட்டவை  துணிப்பையில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது .