பொங்கல் விடுமுறை : அரசு பேருந்துகளில் சுமார் 4.24 லட்சம் பேர் பயணம்

 
bus

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் அரசு பேருந்துகளில் 4.24 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து சென்னை, சேலம், கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கிற தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலர் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். bus

இதையடுத்து பொங்கல் தொடர் விடுமுறை முடிந்த நிலையில் அவர்கள் கடந்த சில நாட்களாக மீண்டும் வேலைக்கு வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. விடுமுறையின் கடைசி நாளான நேற்று பஸ், ரெயில், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த 10 நாட்களில் (10-ந் தேதி முதல் 19 வரை) 4.24 லட்சம் பயணிகள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் (ஜன.19) 67,659 பயணிகள் பயணித்துள்ளனர். கடந்தாண்டு பொங்கலுக்கு 3.34 லட்சம் பயணிகளே பயணம் செய்த நிலையில், இது 27 சதவீதம் அதிகம் என போக்குவரத்துத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.