காவலர் வீர வணக்க நாள் : டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை..!!

 
Police Commemoration Day

 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம்  வைத்து டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை செலுத்தினார். 

1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாளில்  லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10  மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு வீரமரணம் அடைந்த  காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர்கள் வீர வணக்கம் நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் பணியின் போது மரணம் அடைந்த தமிழ்நாட்டு காவலர்கள் 5 பேர் உட்டபட  இந்தியாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த துணை ராணுவப்படையினர் மற்றும் காவல் துறையினர் 213 நபர்கள்  வீர மரணம் அடைந்துள்ளனர். 

Sankar jiwal

கவால்கள் வீர வணக்க நாள் மற்றும் வீர மரணமடைந்த காவல்துறையினர் , துணை ராணுவப் படையினருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில்,   காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் அவர்கள் மலர் வளையம்  வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளும் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினர்.