போலீஸ்காரர் சால்வையால் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

மாங்காட்டில் போலீஸ்காரர் சால்வையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rajasekar

மாங்காடு, வசந்தபுரம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(41), பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி(35), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக விடுமுறையில் இருந்த ராஜசேகர்  காலை வெளியில் சென்று விட்டு மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்தவர் தனது மகனின் அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது மனைவி கதவை தட்டி பார்த்துள்ளார். திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சால்வையால் ராஜசேகர் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இறந்து போன ராஜசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.