ஸ்ரீரங்கத்தில் ரவுடியை சுட்டுப் பிடித்தது போலீஸ்!

 
க்ஷ்

ஸ்ரீரங்கத்தில்  ரவுடி  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பிரபல ரவுடி ஜம்பு என்பவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது போலீசார் அவரை காலில் சுட்டு பிடித்தனர்.

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் அடையவலஞ்சான் பகுதியை சேர்ந்தவர் தலை வெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஆட்டுக்குட்டி சுரேஷ் என்கிற சுரேஷ் அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆட்டுக்குட்டி சுரேஷ் ஜாமினில் வெளியே உள்ளார். நேற்று இரவு சுரேஷ் அவரது மனைவியுடன்  திருவானைக்காவல் அம்பேத்கர் நகர் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு இரண்டு இருசக்கர  வாகனத்தில் வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் சுரேஷை சர மாறியாக வெட்டினர். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் சுரேஷின்  உடலை கைப்பற்றி அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷை கொலை செய்ததாக தலை வெட்டி சந்ருவின் கூட்டாளிகளான நந்தகுமார் (22), ஜம்புகேஸ்வரன் (33), சூர்ய பிரகாஷ் (32), பாலகிருஷ்ணன் (23), விமல்ராஜ் (24) ஆகிய ஐந்து பேரை கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலிருந்து முக்கொம்பு செல்லும்  பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜம்பு என்கிற ஜம்முகேஸ்வரனை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு போலீசார் சென்றனர் அப்பொழுது அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் ஜம்பு என்கிற ஜம்முகேஸ்வரன் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.  இதில் ஆய்வாளர் வெற்றிவேல், உதவி ஆய்வாளர் ராஜகோபால் ,சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில், காவலர் சதீஷ் ஆகிய நான்கு பேர்  காயமடைந்தனர். உடனடியாக தற்காப்பிற்காக உதவி ஆய்வாளர் ராஜகோபால் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஜம்புகேஸ்வரர் இடது காலில் சுட்டார் அதில் ஜம்முகேஸ்வரர் அந்தப் பகுதியிலேயே சுரண்டு விழுந்தார். உடனடியாக இது குறித்து சக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு காயமடைந்த போலீசார் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு உள்ளான ரவுடி ஜம்பு ஆகிய ஐந்து பேரையும் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.