கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்- மசாஜ், ஸ்பா சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை

 
massage

சென்னையில் சட்ட விரோதமாக செயல்படும் 150க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

வெளியே மசாஜ் சென்டர், உள்ளே விபச்சாரம்!. காவல்துறையின் அதிரடி சோதனையில்  சிக்கிய புரோக்கர்கள்!. - TamilSpark

சென்னையில் போலீசாரின் உரிமம் பெற்று முறையான பயிற்சிகள் பெற்ற வல்லுனர்களின் உதவியோடு மனித உடலில் ஏற்படும் வலிகளை போக்கும் வகையிலும், மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள் மூலமாக பல்வேறு சேவைகளை தனியார் மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால் சில கும்பல்கள் போலீசாரின் முறையான உரிமம் பெற்றதாக கூறிக்கொண்டு, எந்தவித உரிமம் மற்றும் பயிற்சி பெறாமல் சட்ட விரோதமான செயல்கள் மற்றும் சில மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் உள்ளிட்டவை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று சென்னை மாநகரம் முழுவதும் 151 மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா சென்டர்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

கீழ்பாக்கம், தியாகராயநகர், அண்ணாநகர், வடபழனி, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக விபச்சார தடுப்பு பிரிவு பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் என்ற இரண்டு காவல் ஆய்வாளர்களும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதற்கு துணையாக இருந்ததாகவும், அவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு சட்ட விரோதமாக பாலியல் தொழிலுக்கு நடத்த அனுமதி அளித்தாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது