காதலிக்க மறுத்த பெண் மீது இளைஞர் கொடூர தாக்குதல்- காவல்துறை விசாரணை

 
ச் ச்

மதுரையில் காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கும் இளைஞர் தாக்கும் சிசிடிவி காட்சிகள், தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை ஒத்தக்கடை அருகே சக்கரா நகரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் லாவண்யா என்ற இளம் பெண் 4 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த 25 வயதான சித்திக் ராஜா, தன்னை காதலிக்க வற்புறுத்தி தினமும் ஜெராக்ஸ் கடையில் நேரில் சென்று லாவண்யாவை தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி கொண்டிருந்த லாவண்யாவிடம் சித்திக் ராஜா காதலிக்க வற்புறுத்தியுள்ளார். அதனை ஏற்க மறுத்த லாவண்யாவை சித்திக் ராஜா தாக்கி விட்டு தப்பியோடினார். 


சித்திக் ராஜா லாவண்யாவை தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த லாவண்யா மதுரை அரசு ராஜாசி தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தாக்குதல் தொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.