பாமக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பு- பாமகவினர் ரகளை

 
ச்

செங்கம் அருகே சுங்கச்சாவடியில்  பாமகவினர் மாநாட்டிற்கு சென்று வந்த வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்ததால் ரகளையில் ஈடுபட்ட பாமகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அருகே உள்ள முறையாறு பகுதியில் புதிதாக அமைத்துள்ள சுங்கச்சாவடியில் இன்று நடந்த பாமகவின் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநில மாநாடு  திருவண்ணாமலையில் நடைபெற்றது.இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்களான  கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம்,திருப்பத்தூர் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலையில் நடைபெற்ற  மாநாட்டிற்கு வந்து செல்லும்  பாமகவினர் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்க கூடாது என செங்கம் பகுதியில் உள்ள பாமகவினர் சுங்கச்சாவடி மேலாளர்களிடம்  கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது 

இந்த மாநாட்டிற்கு சுங்கச்சாவடி வழியாக சுமார் 600 க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து சென்றதாக சுங்கச்சாவடி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்காக சுங்கச்சாவடியில் இரண்டு வழித்தடத்தில் உள்ள சிசிடி அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாற்று வழித்தடங்களை இரண்டு பயன்படுத்தி மற்ற வாகன ஓட்டிகளிடம் வாகனத்திற்கான சுங்க வரியை வசூல் செய்யப்பட்டு வந்தது. அந்த வழியாக சென்ற சில வாகனங்களில் இருந்து பாஸ்ட் ட்ராக் எனப்படும்  qr கோடு மூலம் வாகனத்தில் இருந்து பணம் மற்றும் நம்பர் எழுதப்பட்டு சில வாகனங்கள் சுமார் 20 வாகனங்களுக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர் அனைத்து வழித்தடங்களில் உள்ள கேமராக்களையும் அனைத்து வைத்திருக்க வேண்டும் எனவும் ஒரு சில வாகனங்களில் எடுக்கப்பட்ட பணத்தை உடனே திரும்ப செலுத்த வேண்டும் என அவர்களின் வாகனங்களை நிறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பெரும் வாக்குவாதத்திலும் ரகளையிலும் ஈடுபட்டனர். பின்னர் சுங்கச்சாவடி பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் சமரசத்தில் ஈடுபட்டபோது அவர்களிடமும்  பெரும் வாக்குவாதத்திலும் ரகளையிலும் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது 

இச்சம்பவம் குறித்து அறிந்த செங்கக்காவல் ஆய்வாளர் செல்வராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று பாஸ்ட் ட்ராக் மூலம் எந்தெந்த வாகனத்தில் பணம் எடுக்கப்பட்டதோ அந்த வாகனத்தின் பணத்தை  சுங்கச்சாவடி ஊழியர்கள் மூலம் மீண்டும் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்த பின்பு அங்கிருந்து கலைந்து சென்றனர்.