"அன்புமணி கட்சியை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்”- ஜி.கே.மணி

 
GK Mani GK Mani

இனி பாமகவை ராமதாஸ்தான் வழி நடத்துவார் என பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

gk mani

திண்டிவனம் அருகே தைலாவர தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி,  “நீதிமன்ற தீர்ப்பு மருத்துவர் ரராமதாஸ்க்கு கிடைத்த வெற்றி. மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தேர்தல் ஆணையம் மீது தான். ஆனால் அன்புமணி தரப்பில் நீதிமன்றம் வர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மீது வழக்கு தொடரவில்லை, தேர்தல் ஆணையமும் அன்புமணியும் கூட்டாக சேர்ந்து மோசடி செய்துள்ளனர். 46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிராமம் சென்று பாட்டாளி மக்கள் கட்சிக்காக, மக்களுக்காக உழைத்தவர் டாக்டர் ராமதாஸ். பல மத்திய அமைச்சர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்கினார் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். 2022 ஆம் ஆண்டு அன்புமணியை தலைவராக தேர்ந்தெடுத்தோம். சத்தியம் செய்து சொல்கின்றேன், 2023 ஆம் ஆண்டு தேர்தல் பொதுக்குழு நடைபெற்றதா? தேர்தலில் பொதுக்குழுவில் தலைவராக  அன்புமணியை தேர்வு செய்யவில்லை. அன்புமணி கட்சியை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். கட்சியை ராமதாஸ் வழி நடத்துவார். பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இல்லை” என தெரிவித்தார்.