“கூட்டணி குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும்”- அன்புமணி

 
anbumani anbumani

மஞ்சள் குவிண்டாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் 

ஈரோடு அருகே செம்மாம்பாளையம் கிராமத்தில், மஞ்சள் தோட்டத்தை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி,  விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “கரும்பு, நெல்லுக்கு வழங்குவதை போல் மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும், சேமித்து வைக்க குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும். மஞ்சளுக்கு தனியாக வாரியம் அமைக்க வேண்டும், மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற தனி மையம் உருவாக்க வேண்டும். ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றுள்ளதால் சர்வதேச அளவில் இதனை சந்தைப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக மீது மக்கள் கோபமாக உள்ளனர். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள். மீனவர்கள். இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் 100 நாள் நடை பயணத்தில் சந்தித்து உள்ளேன், ஒரு நபர் கூட திமுகவிற்கு ஆதரவாக பேசவில்லை. தமிழ்நாடு அரசு நெல் கொள்முதலில் சாதனை செய்யவில்லை, வேதனை தான் செய்துள்ளனர். 3.ல் 1 பங்கு மட்டுமே அரசு நெல் கொள்முதல் செய்துள்ளது. நெல் சேமிக்க இடம் இல்லை. 60 ஆண்டு காலத்தில் அடிப்படை கட்டுமானங்களை கூட உருவாக்கவில்லை. டெல்டாகாரன் என சொன்னால் போதாது. டெல்டா விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். 4 மாவட்டங்களில் 915 கொள்முதல் மையங்களில், குறுவை சாகுபடி 50 நாட்களில் 16.5 லட்சம் டன் கொள்முதல் செய்திருக்கலாம். 30 நாட்களில் 11 லட்சம் டன் கொள்முதல் செய்திருக்கலாம். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக அமைச்சர்கள் சொல்கின்றனர். செல்வப் பெருந்தகைக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அமைச்சர்களோ, முதலமைச்சர் கூட இதில் தலையிட முடியாது. நீர் அளவை அளவைப் பொறுத்து அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். வரும் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம் . உட்கட்சி பிரச்சனை அதற்கு பதில் கருத்து சொல்ல விருப்பமில்லை” என்றார்.