ஒரு தலித்தை நாங்க முதலமைச்சராக்குவோம்- அன்புமணி ராமதாஸ்

 
அன்புமணி ராமதாஸ் 

தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் வரும் போகும், ஆனால் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதலமைச்சராக்க முடியாது. எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு தலித் முதலமைச்சர் ஆக முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் திண்டிவனம் அருகேயுள்ள கீழ்சிவிரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை 1998 ஆம் ஆண்டிலே மத்திய அமைச்சர் ஆக்கியது பா.ம.க தான். ஆகவே தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பட்டியலினத்தவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் எங்களை ஆதரித்தால் நிச்சயம் ஒரு தலித்தை முதலமைச்சராக்குவோம். சுதந்திர தினமான இன்றைய நாளில் முதல்வருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அது என்னவெனில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை காக்க சாதிவாரி கணக்கெடுப்பை எடுங்கள். பட்டியல் இன சமுதாயத்திற்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு 14 சதவீதம்தான் கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு கிடைத்து வரும் 30 சதவீத இட ஒதுக்கீடு 24 சதவீதம் மட்டும்தான் கிடைக்கும். 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்து வரும் எம்பிசி சமூகத்திற்கு 14 சதவீதம்தான் கிடைக்கும். 

நான் மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில் 22 ஆண்டுகளாக பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால் ஆல் இந்தியா மெடிக்கல் கோட்டாவில் நான் தான் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன்” என்றார்.