சோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோனினியா காந்தி இத்தாலியின் லூசியானா நகரில் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பிறந்தார்.
இந்நிலையில், சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் உடல் நலத்துடன் நீண்டகாலம் வாழ பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Birthday greetings to Smt. Sonia Gandhi Ji. May she be blessed with a long life and good health.
— Narendra Modi (@narendramodi) December 9, 2025
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான உறுதியான உறுதி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை அவரது கொள்கை ரீதியான பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Birthday greetings to Congress Parliamentary Party Chairperson Tmt. Sonia Gandhi. Her life reflects sacrifice, a selfless public journey, and a steady resolve to uphold secularism and constitutional values.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 9, 2025
May her principled path and guidance continue to strengthen our… pic.twitter.com/CQ2QkAlVY2


