சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்

 
ச்

சிதம்பரம் அருகே உள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்து சுரபுன்னை எனப்படும் அலையாத்திக் காடுகளின் அழகை கண்டு ரசிப்பார்கள். 

சதுப்பு நில காடுகளின் சொர்க்க பூமி... பிச்சாவரம் புதுப்பொலிவு பெறுமா? |  Pichavaram tourist spot issues - hindutamil.in

இந்நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தற்போது மழை பெய்து வருவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டு, படகு இல்லம் மூடப்பட்டுள்ளது. இன்று காலை மழை இல்லாத நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி துவங்கியது. பிச்சாவரத்திற்கு வந்த ஒரு சில சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து படகு சவாரி செய்தனர். ஆனால் சில நிமிடங்களில் சாரல் மழையுடன் மழை பெய்ய துவங்கியது. இதனால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கான டிக்கெட் கொடுப்பது நிறுத்தப்பட்டு, படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Pichavaram mangrove forest has become a top tourist destination in tamil  nadu: தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமாக மாறிய பிச்சாவரம்! படகு சவாரிக்கு  அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

மழையால் சுற்றுலா மையம் மூடப்பட்டதால் படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். சுற்றுலா மையத்தில் உள்ள படகு இல்லத்தை சுற்றிலும் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. படகை சுற்றி தண்ணீர் தேங்கி இருப்பதாலும், படகு இல்லத்திற்கு நடந்து செல்லும் நடைபாதையிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் படகுகளில் ஏறுவதற்கு சுற்றுலாப் பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது. இதுபற்றி கூறிய சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் வந்தோம். ஆனால் மழையால்  படகு சவாரிக்கு அனுமதிக்கவில்லை. அதனால் ஏமாற்றத்துடன் செல்வதாக கூறினர்.