ஆட்சியர் அலுவலகத்தில் அடிதடி - 12 பேர் கைது

 
tn

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tn

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும்  தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை திமுகவினர் தாக்கியுள்ளனர்.  மேலும், திமுகவினரைத் தடுக்க முயற்சித்த,  கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி திரு. பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. 

arrest

இந்நிலையில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏலத்தில் மற்றவர்கள் பங்கேற்காமல் தடுத்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது . இந்த சூழலில்  7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.