பலூன் திருவிழாவை காண வந்த மக்கள் ஏமாற்றம்!

 
ப்

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய சர்வதேச பலூன் திருவிழாவை காண வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா இன்று துவங்கியது இதை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்று இன்று காலை பலூன் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை என மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில் இதில் பங்கேற்க பிரேசில், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட  8 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ராட்சச பலூன்களை பறக்க விடும் வல்லுனர்கள் வந்துள்ளனர் புலி வடிவம் உள்பட பல்வேறு வடிவங்களில் ராட்சச பழகங்கள் காலை பறக்க விடப்பட்டன.

அதிகபட்சம் 50 அடி தூரம் வரை பறக்கும் இந்த ராட்சச பலூன்கள் பொதுமக்களை கவரும் வகையில் அமைந்தது. மேலும், மாமல்லபுரத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த பலூன் திருவிழாவை காண, இன்று மாலை பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் ஆர்வமுடன் வந்தனர் ஆனால் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் பலூன்களை பறக்க வைக்கும் வல்லுனர்கள் விட முடியவில்லை அதனால் முன்பதிவு செய்து பலூன் திருவிழாவிற்கு வந்தவர்கள் பலூன்கள் வானில் பறக்காததால் ஏமாற்றம் அடைந்தனர் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றதாக தெரிவித்தனர்....