விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்- ஆத்தூர் சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

 
traffic

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

 

போகி பண்டிகை, பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் மற்றும் வெள்ளிக்கிழமை அரசு ஒரு நாள் விடுமுறை நாளாக அறிவித்திருந்தது. ஐந்து நாட்களுக்கு மேலாக விடுமுறை என்பதால் தென் மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள், நாளை பள்ளி கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலை நாள் என்பதால் கடந்த வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களாக தொடர்ந்து சென்னை நோக்கி படையெடுத்திருந்தாலும் தற்பொழுது அதிகப்படியான வாகனங்கள் படையெடுக்கின்றன. தற்போது வரை சுமார் 60, ஆயிரம் வாகனங்கள் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

traffic


மேலும் தேசிய நெடுஞ்சாலையில் சிறு சிறு விபத்துக்கள் நடைபெறுவதாலும் இந்த போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது . . இதனால்,  சுங்கச் சாவடியில் கூடுதலாக கவுண்டர்களை திறந்து இலவசமாகவும் விரைவாகவும் கட்டண வசூலித்து வாகனங்களை அனுமதித்தால் இந்த போக்குவரத்து குறைந்திருக்கும் என கூறப்படுகிறது.