தமிழக தலைமைச் செயலாளர் காரை முற்றுகையிட்ட மக்கள்

 

தமிழக தலைமைச் செயலாளர் காரை முற்றுகையிட்ட மக்கள்

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை நேரில் பார்வையிட்டார் . பூண்டி ஏரியில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது அவரது வாகனத்தினை பூண்டி கிராம மக்கள் வழிமறித்துக் கொண்டனர். உடனே வாகனத்தை விட்டு கீழே இறங்கிய தலைமைச் செயலாளர்,பொதுமக்களின் குறைகளை கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தமிழக தலைமைச் செயலாளர் காரை முற்றுகையிட்ட மக்கள்

அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், தலைமைச்செயலாளரின் காலில் விழுந்தார். அவர் காலில் விழுவதை தடுத்து அவரின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் .

பின்னர் கிராமத்தினர் தங்களின் நீண்ட நாள் பிரச்சனையை தலைமைச்செயலாளரிடம் தெரிவித்தனர். பூண்டி கிராமத்தில் இருக்கும் பொது மயான பாதை பல வருடங்களாக ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது. இதனால் அந்த கிராம மக்கள் சடலங்களை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிக் கொண்டுதான் மயானத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதுகுறித்து தலைமை செயலாளரிடம் முறையிட்டபோது அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பின்னர் பூண்டி ஏரியை பார்வையிட்ட அவர் திரும்பிச் செல்லும் போதும், அங்கு நின்ற கிராம மக்களிடம் உங்களின் கோரிக்கை நிச்சயம் பரிசீலனை செய்யப்படும் என்று உறுதி அளித்துச்சென்றார்.