சீமான் கண்ணியத்தை காக்க தவறிவிட்டார் - பபாசி தலைவர் சொக்கலிங்கம் காட்டம்!
சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு பபாசி தலைவர் சொக்கலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அனைவரும் எழுந்து நின்றவுடன் தமிழ்தாய் வாழ்த்து பாடலான நீராரும் கடலுடுத்த பாடலுக்கு பதிலாக பாரதிதாசனின் பாடல் பாடப்பட்டது. தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக வேறுபாடல் பாடப்பட்டது சர்ச்சையானது. நிகழ்ச்சியில் ஒளிக்கப்பட்ட பாரதிதாசன் பாடல் புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்து பாடலாக உள்ளது.
இந்த நிலையில், சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறித்து பபாசி தலைவர் சொக்கலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், சீமான் கண்ணியத்தை காக்கத் தவறிவிட்டார். “48 வருடத்தில் நடக்காது ஒன்று இப்போது நடந்துள்ளது. புத்தக காட்சிக்கு விருந்தினராக வந்த சீமான் எப்படி இதை செய்யலாம்? அவருடைய கண்ணியத்தை காக்கத் தவறிவிட்டார் என கூறினார்.