பார்வதி அம்மாளின் கதை சினிமா கதை அல்ல - மன்னிப்பு கேட்ட ஜெய்பீம் டைரக்டருக்கு காயத்ரி ரகுராம் அறிவுறுத்தல்

 
p

சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக பிடிவாதமாக இருக்கும் நிலையில், ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  1990-களில் ராஜாகண்ணு, விர்பலிங்கம் போன்ற பழங்குடிகள் மரணம், சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா போன்ற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்த துயரம் என பல்வேறு அத்துமீறல்கள் நடந்தன.  இன்று வரையிலும் அம்மக்களுக்கு சமூக பாதுகாப்பின்மையோடு அது தொடரவே செய்கின்றன. எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன. நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய வழக்கில் காவல் துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால், எளிய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்பதை நம்பிக்கை வெளிச்சம் தருகிற வகையில் படமாக்கினோம். 

gy

பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படும் என நான் அறியவில்லை.  1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. சில வினாடிகள் மட்டும் வருகிற அந்த காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும் போஸ்ட் புரடெக்ஷன் பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்தில் வந்திருந்தாலும் அதை மாற்றியிருப்போம்.

யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்கு தனிப்பட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநரா நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.

அனைத்து சமூகத்தினருக்கும் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும் புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இதுகுறித்து தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்,  ‘’பார்வதி அம்மாளின் கதை சினிமா கதை அல்ல. அது ஒரு பெண்ணாக அவர்களுடைய நிஜ வாழ்க்கைப் போராட்டம், அது அவர்களுடைய நிஜ வாழ்க்கை வலி. எனவே படைப்பு சுதந்திரத்துடன் திரைப்படம் எடுக்க முடியாது. பார்வதி அம்மாளுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்.  அதுதான் உண்மையான சமூக நீதி.

வன்னியர்களின் சமூக உணர்வுகளை புண்படுத்தியது எந்த நோக்கமும் இல்லை . ஆனால் மன்னிப்பு கேட்டார். வி.சி.க தலைவருக்கு நன்றி தெரிவித்து,  பா.ம.க தலைவரின் கருத்து வேறுபாடு மற்றும் கண்டனம் ஏற்காதது எல்லாம் ஏதோ ஒரு  நோக்கத்துடன் தோன்றியதுதான் பெரும் சிக்கலை உருவாக்கியது.

இனி இது போன்றவற்றை தவிர்க்கவும். நீங்கள் உண்மையிலேயே சமூக நீதிக்காக போராடுகிறீர்கள் என்றால், உண்மை கதை உண்மையாக இருக்க வேண்டும் கதையை மாற்ற படைப்பாளிகளுக்கு சுதந்திரம் இருக்க முடியாது. மற்ற சமூகம் காயப்படுத்தாதே. கலைஞன் தூய்மையான திறமைக்காக நேசிக்கப்படுகிறான்.’’என்று தெரிவித்திருக்கிறார்.