டீன்ஸ் படத்திற்கு தடை கோரிய வழக்கில் பார்த்திபனுக்கு சாதகம்?

 
டீன்ஸ்

டீன்ஸ் திரைப்படத்திற்கு பணியாற்றியதற்காக தனக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்து நேரில் பேச மறுக்கும் நடிகர் பார்த்திபன், காவல்துறை மூலம் தன்னை மிரட்டி வருவதாக படத்தில் பணியாற்றிய கிராபிக்ஸ் கலைஞர் சிவ பிரசாத் புகார் தெரிவித்துள்ளார்.

R Parthiban lodges a police complaint against his 'Teenz' star ahead of the  film's release | Tamil Movie News - Times of India


நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வருகிற 12-ஆம் தேதி டீன்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் கிராபிக்ஸ் பணியாளராக கோவையை சேர்ந்த சிவ பிரசாத் என்பவர் பணியாற்றியுள்ளார்.  இவர்கள் இருவருக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, கடந்த பிப்ரவரி மாதமே கிராஃபிக்ஸ் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அதற்கு ஊதியமாக 68 லட்சத்து 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக 42 லட்சம் ரூபாய் கொடுத்த பார்த்திபன்,  ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை என முழுத் தொகையும் கொடுக்காமல் கால தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சிவபிரசாத் மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில்  பார்த்திபன் கொடுத்த புகார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தனக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக செலுத்தும் வரை 'டீன்ஸ்' திரைப்படம் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சிவபிரசாத் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஒப்பந்தத்தின் போது பேசியதை விட அதிக கிராபிக்ஸ் வேலைகள் கொடுத்ததாலேயே குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகள் முடிக்க கால தாமதம் ஏற்பட்டதாகவும், தனக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை கொடுக்கும் வரை வரை 'டீன்ஸ்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த மனு  சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக ஜூலை 9 ஆம் தேதி  பதிலளிக்க நடிகர் பார்த்திபனுக்கு  உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று வந்த நிலையில், வருகிற 18 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிராபிக்ஸ் டிசைனர் சிவப்பிரசாத், “ரியல் எஃபெக்ட்ஸ் என்ற பெயரில் பல வருடங்களாக கிராபிக்ஸ் கம்பெனி நடத்தி வருகிறேன். லியோ, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளேன். கடந்த வருடம் நடிகர் பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் திரைப்படத்தில் பணியாற்றினேன். ஆனால் கிராபிக்ஸ் சரியாக இல்லை என கூறி பணம் தராமல் நடிகர் பார்த்திபன் ஏமாற்றி விட்டார். படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன், ஆனால் பதினெட்டாம் தேதி இந்த வழக்கானது ஒத்துழைக்கப்பட்டதால் படத்திற்கு தடை விதிக்க முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தன்னை பற்றி பொய்யான தகவல்களை பரப்பி வரும் நடிகர் பார்த்திபன் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். தாங்கள் கிராபிக்ஸ் பணிகளுக்காக 88 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம். மீதமுள்ள பணத்தை கேட்டதற்கு தன் மீது புகார் கொடுத்துள்ளார். இது நேரில் உட்கார்ந்து பேசினால் முடியக்கூடிய விஷயம், ஆனால் பார்த்திபன் பேசக்கூட தயாராக இல்லை. நிலுவை தொகை 50 லட்சம் ரூபாய் கேட்டால் தன்னை தகாத வார்த்தைகளை கூறி திட்டுவதுடன் பார்த்திபன் மிரட்டுகிறார்”