பிள்ளைகள் எழுதிய கடிதத்தால் மதுப் பழக்கத்தை விட்டொழித்த பெற்றோர்

 
மது

திருச்சியில் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எழுதிய கடிதத்தால் ஏற்பட்ட மாற்றம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோருக்கு மாணவர்கள் எழுதிய கடிதத்தால் மது, புகைப்பழக்கத்தை 15 பெற்றோர்கள் விட்டொழித்தனர். இதையடுத்து சுதந்திர தினத்தை ஒட்டி அந்த 15 பெற்றோர்களையும் விருந்தினராக அழைத்த பள்ளி நிர்வாகம், அவர்களை கவுரவித்தது. தாரை, தப்பட்டையுடன் மனம் திருந்திய பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் வரவேற்பு அளித்தது. 

கடிதத்தில் குழந்தைகள் அடைந்துள்ள மன வேதனையைப் பார்த்த பிறகு இம்முடிவை எடுத்ததாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். மேலும் மதுவை இனி தொடமாட்டோம் என்றும் பெற்றோர் உறுதி மொழி எடுத்தனர். பிள்ளைகளின் கல்விக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் இத்தகைய முடிவை எடுத்ததாகவும் அவர்கள் கூறினர். பெற்ற பிள்ளைகள் எழுதிய கடிதத்தால் பெற்றோர்கள் மனம் திருந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.