திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

 
deepam

கொரோனா தொற்று காரணமாக நூற்றாண்டு கால வரலாற்றில் குறைந்தளவு பக்தர்களை கொண்டு இரண்டாவது முறையாக நடைபெறும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

deepam

உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகைதீபத்திருவிழா கடந்த நவம்பர் 10 ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 9 நாட்களாக விமரிசையாக நடைபெற்றுவருகிறது.10ம் நாளான இன்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோவிலின் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் இருந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட  இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள் திருக்கோவிலினுள் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில்  உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட மற்ற  சன்னதிகளுக்கு கொண்டு சென்று  பரணி தீபத்தினை ஏற்றினார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக இந்த ஆண்டு நூற்றாண்டு கால வரலாற்றில் 2 வது முறையாக  பக்தர்கள்  பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.