ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிவேண்டி நினைவேந்தல் பேரணி- பா.ரஞ்சித்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5- ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரின் வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக 11 பேரையும் போலீசார் காவலில் விசாரணைக்காக எடுத்திருந்தது. அதில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கோரி அவருடைய மனைவி பொற்கொடி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் கே.ஆர்ம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20-ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறவுள்ளது. அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் அணிதிரள்வோம், வாருங்கள் என இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.