ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்!
ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கி இருந்தார். இதேபோல் கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான சத்திய சோதனை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார் சுரேஷ் சங்கையா. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சங்கையா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரேஷ் சங்கையாவின் உயிரிழப்பு திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுரேஷ் சந்திராவின் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகேயுள்ள கிராமத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதி சடங்கு செய்யப்படவுள்ளது. சுரேஷ் சந்திராவுக்கு ஒரு மனைவி மற்றும் ஒரு மகள் இருப்பது உள்ளார்.