தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !

 
rain-34

தென்மேற்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடல் பகுதிகள் இடையே வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

rain

இன்று மற்றும் நாளை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று , நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நாளை தூத்துக்குடி, ராமநாதபுரம் ,கடலூர் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, விழுப்புரம் ,விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி ,கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

rain

27ம் தேதி கடலூர் ,விழுப்புரம், காஞ்சிபுரம் ,சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

karur rain

அதேபோல வருகிற 28ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்,  நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ,விழுப்புரம், கடலூர் ,செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.