முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நேரில் ஆறுதல்

 
முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நேரில் ஆறுதல் முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நேரில் ஆறுதல்

முரசொலி செல்வம் மறைந்ததையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நேரில் ஆறுதல்

50 ஆண்டுகால முரசொலி பத்திரிகையில்  ஆசிரியர், எழுத்தாளர் என பணியாற்றிய மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும் , மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் இன்று உடல்நிலை குறைவால் பெங்களூரில் காலமானார். அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முரசொலி செல்வம் மறைவையொட்டி  இல்லத்திற்கு நேரில் சென்று ஓபிஎஸ் ஆறுதல் தெரிவித்தார். மேலும்  மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும்  முரசொலி செல்வம் உடலுக்கு தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி செலுத்தினார்.