மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் இன்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆய்வு!

 
ttn

வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் இன்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆய்வு மேற்கொள்கின்றனர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல வீடுகள் இடிந்து விழுந்ததுடன் நெற்பயிர்கள் சேதமடைந்தன.  இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர்  முகஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதோடு அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

ops

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று டெல்டா மாவட்டங்களில் நேரில் சென்று பார்வையிட உள்ளனர். கடலூர், மயிலாடுதுறை ,நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருவரும் ஆய்வு  செய்வதுடன்,  மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளனர்.

eps

இதனிடையே அதிமுக ஆட்சியில் நிவர் புயல் பாதிப்பு அதிகம்; ஆனால் உயிரிழப்பு குறைவு என்றும், இந்தமுறை திமுக அரசு மெத்தனமாக செயல்பட்டதே உயிரிழப்பு மற்றும் சேதாரத்திற்கு காரணம் என்று அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.